சீனாவில் உள்ள பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் மேற்படிப்பைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின்
விருப்ப பட்டியலில் சீனாவும் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் இந்தியைப் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கைச் சீராக அதிகரித்து வருவதாக அந்நாட்டின் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் உள்ள பள்ளிகளின் பாடப்பிரிவிலும் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதையொட்டி சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பிரதீக் மாத்தூர் ஆகியோர், இந்தி பயிற்றுவிப்பாளரான பவ்யா மேத்தாவை ஷாங்காய் நகரில் கவுரவித்தனர்.
இவர், கீர்த்தி சக்ரா விருது பெற்ற பிரிகேடியர் ரவி தத் மேத்தாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.