தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான டிக்கெட்டுகள் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல பிரபலமான வழித்தடங்களில் 50 முதல் 100% வரை விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அடோட்ரிப்பின் நிறுவனரான விகாஸ் கட்டோச் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பெங்களூரு முதல் கான்பூர் வரையிலான சில வழித்தடங்களில் சராசரி விமான கட்டணம் 36% அதிகரித்து, ஒரு வழி விமான பயண கட்டணமே 40,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
ஹைதராபாத் – டெல்லி வழித்தடத்தில் 18,500 ரூபாய் வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதே நிலையே பிற வழித்தடங்களிலும் நிலவுவதால் பயணிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.