கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காவல் ரோந்து வாகனம் மீது திமுக பிரமுகரின் கார் மோதியதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
குளச்சல் திமுகப் பிரமுகர் நாகூர்கான் என்பவரின் சொகுசு கார், திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல் ரோந்து வாகனம் மீது மோதியது.
இதில் சாலையோர பள்ளத்தில் ரோந்து வாகனம் கவிழ்ந்தது. விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.