கலிஃபோர்னியாவில் நடைபெற்ற பூசணிக்காய் போட்டியில் பொறியாளர் கொண்டு வந்த ஆயிரத்து 64 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதல் பரிசை வென்றது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாஃப் மூன் பேயில் ஆண்டுதோறும் பூசணிக்காய் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
உலகின் மிகப்பெரிய பூசணிக்காயை எடைப்போடும் இந்தப் போட்டியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த அதிக எடையுள்ள பூசணிக்காய்களைக் காட்சிக்கு கொண்டு வருவார்கள்.
அந்த வகையில் 52வது ஆண்டாக நடைபெற்ற போட்டியில் கலிபோர்னியாவின் சாண்டா ரோசாவைச் சேர்ந்த பொறியாளரான பிராண்டன் டாசன் கொண்டு வந்த ஆயிரத்து 64 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.