ஆயிரத்து 600க்கும் அதிகமான கிரெடிட் கார்டுகளை வைத்திருந்ததற்காக இந்தியர் ஒருவர் கின்னஸ் சாதனைப் புத்தக்கத்தில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், கடனில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் பலரும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த தயங்கி வருகின்றனர்.
ஆனால், மனிஷ் தாமேஜா என்ற இந்தியர் ஆயிரத்து 638 கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, அதிகக் கிரெடிட் கார்டுகள் வைத்துள்ள நபர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
லக்னோவைச் சேர்ந்த மனிஷ் தாமேஜா ஆயிரத்து 638 கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியும் அவருக்கு ஒரு ரூபாய் கூட கடன் இல்லை என்பது தான் வியக்க வைக்கும் தகவலாக உள்ளது.
மனீஷ் ஒரு இளங்கலைப் பட்டமும், 4 முதுகலைப் பட்டமும் படித்து இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருகிறார்.
இத்தனைக் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினாலும் மணீஷ் தன்னுடைய சிபில் ஸ்கோரைச் சரியாக பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.