சாதிய பெயர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திருமாவளவன் மழுப்பலாகப் பதிலளித்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருமாவளவன், காலமும் சூழலும் அனுமதித்தால் ஆணவ கொலைத் தடுப்புச் சட்டம் குறித்து பேரவையில் பேசுவோம் என்று கூறினார்.
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் சாதியக் குறியீடு இருப்பது குறித்த கேள்விக்கு, இனி வரும் காலத்தில் எந்தப் பெயரும் சாதிப் பெயராக இருக்கக் கூடாது என்பதே கொள்கை முடிவு என்று பதிலளித்துள்ளார்.
இது குறித்து தொடர்ச்சியாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் மழுப்பலாகப் பதில் கூறினார்.