டிசைனர் மனிஷ் மல்ஹோத்ராவின் தீபாவளி விருந்தில் நீடா அம்பானி கொண்டு வந்த கைப் பையின் விலை அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் உள்ளது.
பிரபல தொழில் அதிபரும் இந்திய ஆடை வடிவமைப்பாளருமான மணிஷ் மல்கோத்ரா மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தீபாவளி விருந்து வைத்தார்.
இதில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி அவரது மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஹெர்மெஸ் கெல்லிமார்போஸ் பையுடன் வந்த நீடா அம்பானி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 17 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள ஹெர்மெஸ் கெல்லிமார்போஸ் கைப்பை உலகில் 3 பேரிடம் மட்டுமே உள்ளது.
அதில் நீடா அம்பானியும் ஒருவர். இந்தக் கைப்பையில் 3 ஆயிரத்து 25 வைரக் கற்கள் உள்ளன.
சினிமா பிரபலங்களையும் மிஞ்சும் அளவில் வெள்ளி சீக்வின் சேலை மற்றும் வைரக் கற்களால் ஆன கைப்பையுடன் வலம் வந்த நீடா அம்பானி படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.