அமைதிக்கான நோபல் பரிசு எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நார்வேயில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடி உள்ளது.
2025ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு நார்வே குழுவினர் அறிவித்தனர்.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடியதற்காக அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்ததாக நார்வே குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்கியதற்கு வெனிசுலா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது. காரணத்தைத் தெரிவிக்காமல் கராகஸ் ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடிவிட்டதாக நார்வேயின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.