கோவையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கோவை மாநகாரட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, அண்மையில் கோவை-அவிநாசி சாலையில் ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றித் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் இந்தத் திட்டத்தை கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நன்றித் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனையடுத்துத் திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறப்பு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன், மேயர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், 103 தீர்மானங்களில் 55 தீர்மானங்களுக்கு முன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.