உலகின் முதல் செங்குத்து மிதக்கும் சூரிய சக்தி மின்நிலையத்தை ஜெர்மனி அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள ஸ்டார்ன்பெர்க் நகரில் ஷின் பவர் நிறுவனம் உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை வெற்றிகரமாக நிறுவியுள்ளது.
Jais gravel pit ஏரியில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சூரிய மின்திட்டம், உள்ளூர் மற்றும் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.
ஏரியின் வெறும் 4.65 சதவீதப் பகுதியை மட்டுமே பயன்படுத்தி, 60 சதவீதம் வரை மின் பயன்பாட்டைக் குறைத்துள்ளது.
எதிர்காலத்தில் இது 70 சதவீதம் வரை உயரும் என ஷின் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் கடல்சார் பயன்பாட்டிற்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.