உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலியை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் பணியாற்றிய ராகேஷ், ராஷ்மி தம்பதியினர் மேப்பில்ஸ் எனும் பயண வழிகாட்டி செயலியை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், சுதேசி பொருட்களைப் பயன்படுத்தும் வகையில் மேப்பில்ஸ் செயலி உதவியுடன் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காரில் பயணம் மேற்கொண்டார்.
மேலும், அனைவரும் மேப்பில்ஸ் செயலியைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். இதற்கு அச்செயலியை உருவாக்கிய மேப் மை இந்தியா நிறுவனம் நன்றித் தெரிவித்துள்ளது.