வடகிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,
நாளை, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 16ஆம் தேதி கோவை, நீலகிரி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைப் பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.