நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இருந்து ஒருவர் உயிர் தப்பிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழைக் காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பியாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாகச் சுமார் 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆற்றினைக் கடக்க முடியாமல் சிக்கி தவித்தனர்.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி சுற்றுலா பயணிகளைப் பத்திரமாக மீட்டனர்.