ஆப்ரேஷன் சிந்தூர் தவிர்க்க முடியாத ஒன்று என ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளுக்குப் படைகளை பங்களிக்கும் நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ ராஜிவ் கய் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைத் தவிர்க்க முடியாத ஒன்று எனத் தெரிவித்தார்.
ஆனால் அதற்கு முன்னதாக எதிரிகளைத் தடுக்கும் வகையில் எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்திய ராணுவம் பாகிஸ்தானின் 11 விமான தளங்களைத் துல்லியமாக தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
எட்டு விமான தளங்கள், மூன்று ஹேங்கர்கள் மற்றும் நான்கு ரேடார்கள் முற்றிலும் சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதால் தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக ராஜிவ் கய் கூறினார்.