தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், மதுரையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் புத்தாடைகளை வாங்க குவிந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாசி வீதி, வெளி வீதிகள், விளக்குத்தூண், மஞ்சணக்காரத் தெரு, காமராஜர் சாலை, கீழவாசல், அண்ணா நகர் பகுதிகளில் விற்பனைக் களைகட்டியுள்ளது.
வெயில், மழை எனக் காலநிலை மாறியபோதும், கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை மிகுந்த ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
மதுரை மட்டுமின்றி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் , தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்ததால், கடைவீதிகள் திணறிப்போயின.