தீபாவளி பண்டிகையன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.