மேற்கு வங்கத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், துர்காபூரில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னதாக மாணவி ஏன் இரவு நேரத்தில் விடுதியை விட்டு வெளியே வந்தார் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.