சென்னை தி. நகரில் பாஜக மத்திய அரசு நலத் திட்ட பிரிவு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது.
தமிழகப் பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநிலத் தலைவர் சென்னை ராஜா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர்க் கரு நாகராஜன், மத்திய அரசு நலத் திட்ட பிரிவு மாநில இணை அமைப்பாளர்கள் லோகேந்திரன் மற்றும் முருகானந்தம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்குச் சென்று அடைவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், விசிகத் தலைவர் திருமாவளவன் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுவதாக தெரிவித்தார்.
மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.