இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 3 இருமல் மருந்துகளைத் தவிர்க்குமாறு தேசிய ஒழுங்குமுறை அமைப்பு அதிகாரிகளுக்கு உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை அருந்திய மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலகில் உள்ள தேசிய ஒழுங்குமுறை அமைப்பு அதிகாரிகளுக்கு உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப், ரெஸ்பி பிரஷ் டிஆர் மற்றும் ‘ரீ லைப்’ ஆகிய தரமற்ற இருமல் மருந்துகள் தங்கள் நாடுகளில் இருந்தால் அதனைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட மருந்துகள் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகளில் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.