லத்தீன் அமெரிக்க நாடான ஈகுவடார் நாட்டில் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி தீவிரமடைய தொடங்கியுள்ளது.
தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு வளையத்தையும் மீற முயன்றதனால் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், பலரை கைது செய்துள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து ஏற்கனவே பேசிய அதிபர் டேனியல் நோபோவா, போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணியாது என்றும், போராட்டத்தில் வன்முறையைக் கையில் எடுப்பவர்கள் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள் எனவும் எச்சரித்திருந்தார்.
இருப்பினும் போராட்டம் பல்வேறு மாகாணங்களில் தொடர்வதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.