கர்நாடகா மாநிலம், பிதாரில் டிராக்டர் மீது அதிவேகமாக வந்த ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளான காட்சிகள் வைரலாகி வருகின்றன.
பிதாரில் உள்ள கானன்பூர் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் ஒன்று வளைவில் திரும்ப முயன்றது.
அப்போது வேகமாக வந்த ஸ்கூட்டர் ஒன்று, டிராக்டரின் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதில் ஸ்கூட்டரில் பயணித்தவர்கள் காற்றில் 20 அடி தூரத்திற்குப் பறந்து சென்று சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதிவேகத்தைத் தவிர்க்க வேண்டும் எனப் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.