சைபர் நிதி மோசடி செய்யும் ஆயிரத்து 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.
இணையவழி குற்றப்பிரிவு மற்றும் தேசிய குற்றவியல் அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா தொடங்கியுள்ளன.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் இணையவழி குற்றப்பிரிவின் கூடுதல் காவல் இயக்குநர் சந்தீப் மிட்டல், NFSU வளாக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தீபக் ராஜ் ராவ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் மிட்டல், கூடுதல் காவல் இயக்குநரின் தலைமையில் இயங்கும் சைபர் ரோந்து குழுவானது, சைபர் நிதி மோசடி செய்யும் ஆயிரத்து 277 சமூக ஊடக பக்கங்களை முடக்கியுள்ளதாக தெரிவித்தார்.
நடப்பாண்டில் மட்டும் சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 952 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 27 சைபர் குற்றவாளிகள் குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர்,
நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆப்ரேஷன் ஹைட்ரா மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் அளித்தார்.