“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்திருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இட்லி கடை திரைப்படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனநிறைவாகக் கண்டுகளிக்கும் வண்ணம் காட்சிகள் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
படத்தில் நடிகர் தனுஷ், இளைஞர்கள் வாழ்க்கையில், மனதிற்கும், பணத்திற்கும் இடையேயான ஒரு போராட்டத்தை பற்றி தைரியமாக உடைத்து பேசியிருப்பது பாராட்டுக்குரியது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத்தில் காட்டப்படும் கிராம வாழ்க்கையும், கிராம தெய்வ வழிபாடுகளும், இயல்பான கதாபாத்திரங்களும், மனதிற்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல அற்புதமான படைப்புகளை உருவாக்கி மக்களை மகிழ்விக்கவும், மேலும் பல விருதுகளை வெல்லவும் தனுஷூக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.