மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன் நக்சல்கள் சரணடைந்தனர்.
2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சல்கள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால் நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் வேட்டையாடப்பட்டு வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் அவர்கள் சரணடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் கட்சிரோலியில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னர், நக்சல் தளபதி மல்லோஜுலா வேணுகோபால் ராவ் உட்பட சுமார் 60 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்.