தீபாவளி வசூல் வேட்டை உச்சம் - தீயணைப்பு, சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களில் ரெய்டு!
Oct 9, 2026, 08:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி வசூல் வேட்டை உச்சம் – தீயணைப்பு, சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களில் ரெய்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 16, 2025, 09:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு மற்றும் சார் பதிவாளர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமம் மற்றும் தடையில்லாச் சான்று வழங்குவதற்காக தீயணைப்புத் துறையினர் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில், காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள தீயணைப்பு மீட்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதேபோல், திருவண்ணாமலை‌ வேட்டவலம் சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்துள்ளதாகவும், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து, அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், புதுக்கோட்டை பொதுப்பணித்துறை தெற்கு வெள்ளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், செயற்பொறியாளர் சண்முகவேலுவின் மேஜையில் இருந்து மட்டும் இரண்டு லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சார் பதிவாளரின் அறை மற்றும் கார்களிலிருந்து கணக்கில் வராத 72 ஆயிரத்து 100 ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 1.88 லட்சம் ரூபாய் சிக்கியது. ரகசிய தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், அன்பழகன் மாவட்ட ஆய்வுகுழு அலுவலக ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் கொண்ட குழுவினர் பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில்வராத சோதனையில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் 52 ஆயிரத்து 600 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தலைமறைவாகியுள்ள அலுவலர் சக்திவேலை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Anti-Corruption Police officers raiddeepavalianti-corruption departmentsub-registrar offices idiwali cash collection
Share
Tweet
SendShare
Previous Post

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 8 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

Related News

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies