ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் கனரக லாரியும் காரும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலோத்ராவில் உள்ள சடா கிராமத்தில் கனரக லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 5 இளைஞர்களில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.