சபரிமலை, மாளிகைப்புரம் மேல் சாந்திகளை தேர்வு செய்யும் பந்தள மகாராஜா குடும்ப வாரிசுகளான இருகுழந்தைகளை பந்தளம் அரண்மனை அங்கீகரித்து அறிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு, பாரம்பரிய குலுக்கல் முறையில் நாளை மறுதினம் நடக்கிறது.
மேல்சாந்திகளை தேர்ந்தெடுக்கும் அங்கீகாரத்தை பந்தளம் அரண்மனையின் பெரிய தம்புரானான, “திருவோணம் நாள் ராமவர்ம ராஜா”, அவரது குடும்ப வாரிசுகளான கஷ்யாப் வர்மா, மைதிலி வர்மா ஆகியோருக்கு அளித்துள்ளார்.
இந்த நிலையில், மேல்சாந்திகளை தேர்ந்தெடுக்கும் இரு குழந்தைகளையும் அங்கீகரித்துப் பந்தளம் அரண்மனை அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் தேர்வாகும் மேல்சாந்திகள், நவம்பர் 16ம் தேதி பொறுப்பேற்று ஓராண்டுக்கு சன்னதிகளில் தங்கி பணியாற்ற உள்ளனர்.