பெருவில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
நேபாளத்தைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் GEN Z இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெருவில் அரசின் ஊழல் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர்களின் எதிர்ப்பால் அதிபர் டினா போலுவார்ட் பதவி விலகிய நிலையில் புதிய அதிபராக ஜோஸ் ஜெரி பதவியேற்றுக் கொண்டார். இருப்பினும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை.
இந்நிலையில் தலைநகர் லிமாவில் நடைபெற்ற இளைஞர்களின் பேரணியில் வன்முறை வெடித்தது. பெருவின் காங்கிரஸ் தலைமையகம் முன்பு போராட்டம் நடத்திய இளைஞர்கள், தடுப்பு வேலிகளை தீயிட்டு கொளுத்தினர்.
அப்போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.