ஜப்பானில் உள்ள பூங்காவில் பூத்து குலுங்கும் விதவிதமான பூக்களை சுற்று லாபயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
கவாகுச்சிகோ ஓஷி என்பது ஜப்பானில், கவாகுச்சிகோ ஏரியின் வடக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு அழகான பூங்காவாகும். இது புஜி மலைக்கு மிகவும் அருகில் உள்ளது.
ஆண்டு முழுவதும் பருவத்திற்கு ஏற்பப் பல்வேறு வண்ண மலர்கள் இங்குப் பூத்து குலுங்குகின்றன.
அதனால் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அந்தவகையில், புஜி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் அழகுக்கு மத்தியில் அனைவரையும் கவரும் வகையில் வண்ண வண்ண மலர்கள், விதவிதமான செடிகள் பூங்காவில் காட்சிப்படுத்தப்படுள்ளன.
அதோடு மட்டுமல்லாமல் இயற்கையை ரசித்துக் கொண்டே பூங்காவில் உள்ள ஓட்டல்களில் உணவருந்தியும் பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.