நித்தியானந்தா மற்றும் சீடர்கள் மீதான வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக் காவல்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகரை சேர்ந்த மருத்துவர் கணேஷ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நித்தியானந்தா மீது கொண்ட பற்றினால், தனது 40 ஏக்கர் இடத்தை நித்தியானந்தா தியான பீடத்திற்கு நன்கொடையாக வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர், அவரது கருத்துகளில் ஏற்பட்ட முரண்பாடால் அந்த நிலத்தை திரும்பப் பெற்றதாகக் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக நித்தியானந்தா மற்றும் அவரது சீடர்கள் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகக் கூறியுள்ள கணேஷ், இதுபற்றிப் புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன் மூன்று மாதத்தில் வழக்கை விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.