கன்னியாகுமரி மாவட்டம் காளி கேசம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை மாறா மலை அடிவாரத்தில் காளிகேசம் பகுதி உள்ளது.
இந்தப் பகுதியையொட்டி காளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் காளி கேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை காளிதேசம், உலக்கை அருவி பகுதிகளுக்குச் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் செல்வதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.