தூய்மை பணியாளர் பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேச வலியுறுத்திச் சென்னை அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது.
அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரர் மருத்துவமனையின் நுழைவு வாயிலில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தங்களது பிரச்னைகள் குறித்து பேச வலியுறுத்திப் போராட்டம் நடத்த முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
அப்போது, போராட்டக்காரர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து தூய்மை பணியாளர்களை வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீசார் கிண்டி, சைதாப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.