ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தீபாவளி திருவிழாவில் வங்கி ஊழியர்கள் உற்சாகத்துடன் நடனமாடினர்.
வரும் 20ம் தேதி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இயங்கி வரும் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி நிர்வாகம் சார்பில் தனியார் உணவகத்தில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது.
சேலை உள்ளிட்ட இந்திய பாரம்பரிய உடைகள் அணிந்து கொண்டு பாலிவுட் பாடலுக்கு ஊழியர்கள் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.