சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா ஆகியோர் அதிகாரிகளிடம் ஆதாரங்களை சமர்பித்து விளக்கம் அளித்தனர்.
சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாகப் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதுதொடர்பாகச் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா புகார் அளித்தார்.
இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசல்டா ஆகிய இருவருக்கும் மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது.
அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான இருவரும் அதிகாரிகளிடம் ஆதாரங்களை சமர்பித்து விளக்கம் அளித்தனர்.