கனமழை காரணமாகக் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், அதிகாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கடையாலு மூடு, அருமனை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாததால் மாணவர்கள் மழையில் குடைபிடித்தபடி சென்றனர்.
குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.
குழித்துறை பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளான நிலையில், தினசரி வியாபாரிகள் மழையில் நனைந்தபடி காய்கறிகள் மற்றும் மீன்களை விற்பனை செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாகக் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.