வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை ராஜா ராணி போல் வைத்திருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞர்களின் கனவாக இருக்கும்.
அந்தக் கனவை நனவாக்கியுள்ளா இந்திய இளைஞர் ஒருவர். உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் காஷ்யப். இவர் அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தனது பெற்றோருக்காக டெக்சாஸ் நகரத்தில் மிக உயரமான கட்டடத்தில் 104 மாடியில் உள்ள வீட்டை வாங்கியுள்ளார் காஷ்யப்.
உயரத்தில் இருந்து நியூயார்க் நகரத்தை பெற்றோர் கண்டு உற்சாகம் அடையும் காட்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பெருமை அடைந்துள்ளார்.
அத்துடன் BMW காரில் தனது பெற்றோரை அமர வைத்து அமெரிக்கா முழுவதும் சுற்றிக் காட்டி வருகிறார் காஷ்யப்.
தனக்காக எண்ணற்ற தியாகங்களை செய்த பெற்றோருக்காகக் காஷ்யப் செய்துள்ள செயல் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.