சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 (Elf V1) என்ற ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
the lord of the rings திரைப்படத்தில் elf இன மக்களை பார்த்திருப்பீர்கள். காதுகள் கூர்மையாக, நீளமாக இருக்கும் elf போன்ற ரோபாவை சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள AheadForm என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த AI ரோபோவுக்கு Elf V1 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் தொழில்நுட்பம் சுற்றுப்புறத்தை உணரவும், மனிதர்களுடன் உரையாடவும், கற்றுக்கொள்ளவும், தன்னிலை அறிவுடன் செயல்படவும் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, மனிதர்களைப் போலவே உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவனைகள்.
கண்கள், உதடுகள் உள்ளிட்டவை பேசும் வார்த்தைகளுடன் ஒத்த ஒலியமைப்பில் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், மனிதர்களுடன் நடக்கும் உரையாடல்கள் இயல்பாக உள்ளன.