கனடாவில் பிரபல இந்திய நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான கேப்ஸ் கஃபே உணவகம் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்ரேயில் உள்ள கபில் சர்மாவின் கஃபே மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதற்கான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. காருக்குள் இருந்தபடி ஒரு நபர் உணவகத்தை நோக்கி சரமாரியாக சுடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் உணவகம் சேதமடைந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல ரவுடி கும்பலான லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகளான கோல்டி தில்லான் மற்றும் குல்தீப் சித்து ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களில் கபில் சர்மா உணவகம் மீது 3வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.