சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் மாநில நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு பாஜக ஆயத்தமாகிக் கொண்டு வருகிறது
அகில இந்திய பாஜக சார்பில் தமிழ்நாட்டிற்கான தேர்தல் பொறுப்பாளர்களாக பைஜெயந்த் பாண்டா மற்றும் முரளிதர் மோஹோல் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்
இந்நிலையில் 2 நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ள தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, இன்று இரண்டாவது நாளாக மாநில நிர்வாகிகளை சந்திக்கிறார்
2026 தேர்தலுக்கான ஏற்பாடுகள், கால நிலவரம், கூட்டணி கட்சிகளுடனான நெருக்கம், கூடுதல் கட்சிகளை இணைப்பது, பூத் கமிட்டி முதல் கட்சியை ஆயத்தப் படுத்துவது உள்ளிட்ட பணிகள் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது