மக்களுக்கு திமுக கொடுத்தது அல்வா மட்டும்தான் என பாஜக மாநில செயலாளர்
வினோஜ் பி.செல்வம் விமர்சித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 500 வாக்குறுதிகளுக்கு மேல் மக்களுக்கு அல்வாவாக கொடுத்துவிட்டு, அதில் 20 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
தமிழகத்திற்க தொழில் முதலீடு எதுவும் வரவில்லை என்றும், சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
உதயநிதிக்கு ஞானம் பிறக்கவில்லை தேர்தல் பயம் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.