தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களால் ஆற்காடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில், 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள புதிய மேம்பாலத்தின் மீது தற்காலிகமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.