ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கட்டப்பட்ட வந்த மேம்பாலம் கடும் போக்குவரத்து நெரிசலால் அவசர அவசரமாக திறக்கப்பட்டது.
சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பால கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தீபாவளி விடுமுறையை ஒட்டி மக்கள் சொந்த ஊர் செல்வதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இந்நிலையில் பணிகள் முழுமை பெறாதபோதும் போக்குவரத்து நெரிசலால் காவல்துறையினர் மேம்பாலத்தை அவசர அவசரமாக திறந்து வைத்தனர்.