திக்...திக்..திக்...சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 18, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலத்தில் திகில் படங்களில் வரும் பாழடைந்த பங்களா போல் காட்சியளிக்கும் வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பில் பொதுமக்கள் வாழவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆங்காங்கே தேங்கியிருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நாராயண நகர் மற்றும் குறிஞ்சி நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. 10 அலகுகளில் 400க்கும் அதிகமான வீடுகளை உள்ளடக்கியிருக்கும் இந்த குடியிருப்பு மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை தற்போதுவரை நிறைவேறாமல் இருப்பதாக குடியிருப்புவாசதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திகில் திரைப்படங்களில் வரும் பழமையான கட்டடங்களை போல காட்சியளிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் தொடங்கி எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாத காரணத்தினால், ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் எழுந்துள்ளது.

கழிவுநீர் கால்வாய் தண்ணீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், சில நேரங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் அவ்வப்போது இடிந்து விழும் மேற்கூரைகள் மற்றும் பால்கனிகளால் சிலர் காயமடைந்திருக்கும் நிலையில் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கக் கூட முடியாத அவலநிலைக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த நிலையில் இருக்கும் குடியிருப்பை புணரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கான தொடக்கப்பணிகள் கூட இன்றளவும் நடைபெறவில்லை என்பதே குடியிருப்புவாசிகளின் பிரதான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.

குடியிருப்புவாசிகளிடம் உரிய நேரத்தில் உரிய வாடகையை பெறும் வீட்டுவசதிவாரியம் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது கடமை என்பதை உணர்ந்து உடனடியாக சிதிலமடைந்த குடியிருப்புகளை புனரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Narayana NagarsalemKurinji Nagarhousing board apartmentsdilapidated bungalows
Share
Tweet
SendShare
Previous Post

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

Next Post

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies