ChatGPT-யில் ஆபாசத்தை அனுமதிக்கப் போவதாக OPenAI CEO சாம் ஆலட்மேன் தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியின் கருவியாக ChatGPT பார்க்கப்படும் நிலையில், இனி பயனர்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..
AI துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் ChatGPT பலதரப்பட்ட மக்களின் விருப்பமான AI Tool ஆகவே மாறிவிட்டது… AI-வளர்ச்சியில் அபார பங்கு வகிக்கும் ChatGPT, சர்வதேச அளவில் அதிகமானோர் பயன்படுத்தும் Tool ஆக மாறியிருக்கிறது… AI துறையை ChatGPT-க்கு முன்பு, ChatGPT-க்கு பின்பு என்ற பிரிக்கும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு துறையில் தனித்துவம் பெற்று நிற்கிறது ChatGPT….
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்வ சாதாரணமாக ChatGPT-ஐ பயன்படுத்தி வரும் நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் OpenAI CEO சாம் ஆல்ட்மேன்….. இனி வரும் காலங்களில் Adult contents அதாவது ஆபாசத்தை அனுமதிக்கப் போவதாக கூறி அதிர்ச்சியூட்டிருக்கிறார் சாம் ஆல்ட்மேன்.. பயனரின் வயது சரிபார்க்கப்பட்டு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற கண்டெண்டுகள் அனுமதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். பகிரங்கமாக சொல்ல வேண்டுமென்றால், ChatGPT-யில் ஆபாசத்தை அனுமதிக்க முடிவு எடுத்திருக்கிறது OpenAI…….
இதுவரை பயனர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று கூறிவந்த நிலையில், பாலியல் அல்லது ஆபாச கண்டெண்டுகளுக்கு அனுமதி வழங்குவது பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது… பயனர்களின் எண்ணிக்கையை பெருக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பார்க்கப்பட்டாலும், ChatGPT புதிய மாற்றத்தை அனுமதித்திருப்பது, பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது…
வயது சரிபார்ப்பு என்ற ஒரு ஆப்சன் இருந்தாலும், அதையெல்லாம் ஏமாற்றுவது எவ்வளவு எளிது என்பது அனைவரும் அறிந்ததே… இதனால் குழந்தைகள் AI Tool-ஐ பயன்படுத்த முடியாத நிலை, பயன்படுத்த அனுமதிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது…
தங்களது நிறுவனம் உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர் அல்ல என்று கூறியுள்ள OpenAI CEO Sam Altman, பயனர்களுக்கு தேர்வுகளை வழங்குவதே தங்கள் நோக்கம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்…
அதே நேரத்தில் அவரது பதிவு மற்றும் அறிவிப்பு விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில்,ChatGPT-யில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்த தனது பதிவு, தான் நினைத்ததை விட அதிகமான விமர்சனங்களை பெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
பாலியல் ரீதியான AI சாட்போட்கள் இயல்பாகவே ஆபத்தானவை என்றும், செயற்கையான நெருக்கம் உண்மையான மனநல பாதிப்புகளை உருவாக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இந்த சாட்போட்கள், பெரியவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று கூறியுள்ள அவர்கள், பாலியல் ரீதியான வன்முறை சமூகத்தின் திணிக்கப்பட கூடிய அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
பயனர் நலனில், OpenAI உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், ChatGPT-யில் ஆபாசத்தை திணிப்பதை நிறுத்தி, மனிதகுலத்திற்கு நேர்மறையான எண்ணத்தை விதைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்..
இந்த நிலையில், இதுபோன்ற பதிவுகளுக்கு எதிர்வினையாற்றியுள்ள சாம் ஆல்ட்மேன், மனநலம் தொடர்பான எந்தக் கொள்கைகளையும் தளர்த்தாமல், டீனேஜர்களின் தனியுரிமை மற்றும் சுதந்திரத்தை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க நிறுவனம் முடிவு செய்து வருவதாக கூறியிருக்கிறார். இதுவொரு புதிய மற்றும் சக்திவாய்ந்த தொழில்நுட்பம் என்றும், சிறார்களுக்கு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு தேவை என்பதை புரிந்து கொண்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்..
எனினும் இதுபோன்ற ஆபத்துகளை தவிர்க்கவும், குழந்தைகளை பாதுகாக்கவும், பெற்றோர்கள் தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து…,