உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவியில் அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவியின் அருகே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் மற்றும் தரிசனம் வழக்கம்போல நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.