சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. சிறிய ரக பட்டாசுகள் முதல் பெரிய பட்டாசுகள் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த வியாபாரிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதாகவும் கூறினர். 50 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பட்டாசுகள் விற்பதாகவும் அதனை வாங்குவதற்கு பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.