ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் கடந்த மாதம் 22 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் அஸ்விணி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி குறைப்பால் நுகர்வோருக்கு பலன் கிடைத்துள்ளதாகவும், கார், ஏ.சி, வாஷிங் மெஷின், டி.வி. உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் டிராக்டர் விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக ஆட்டோ மொபைல் துறையில் விற்பனை குறிப்பிடும் படியாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.