தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வதற்கு போதுமான பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி விடுமுறை தொடங்கியதை அடுத்து சென்னை வாசிகள் பலரும் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். . தீபாவளிக்காக பல்வேறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் மக்கள், முன்பதிவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
பல்வேறு ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால், பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.