தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களால் தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சென்னையில் பணிபுரியும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவண்ணம் உள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அந்த வகையில் சொந்த ஊர் செல்ல தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த மக்களால் கூட்டம் அலைமோதியது. இதனால் ரயில் நிலையம் முழுவதும் கடும் நெரிசலுடன் காணப்பட்டது.