திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களை வரிசையில் நிற்க வைத்து போலீசார் பாதுகாப்பாக அனுப்பினர்.
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர். இதன் காரணமாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் கோவில் வழி பேருந்து நிலையங்களில் ஏராளமானோர் குவிந்தனர்.
குறிப்பாக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் செல்ல ஏராளமான பயணிகள் திரண்டனர். அவர்களை வரிசையாக நிற்க வைத்த போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற்றி அனுப்பினர்.